Sat, Dec 21, 2024

Forex trading in Tamil

போரெக்ஸ் டிரேடிங் (Forex Trading Market)

போரெக்ஸ் மார்க்கெட், உலகத்தில் பெரிய மற்றும் நம்பர் 1 மார்க்கெட். இதில் தினசரி 8 லட்சம் கோடி வர்த்தகம் செய்யப்படுகிறது. அதனால் போரெக்ஸ்-ல் நிறைய சம்பாதிக்க முடியும். போரெக்ஸ் மார்க்கெட் ஏறினாலும் இறங்கினாலும்  சரி நம்மால் சம்பாதிக்க முடியும் என்பது இதன் சிறப்பு!

போரக்ஸ் என்றால் என்ன ?

FOREX = Foreign Exchange (Exchange Currencies)
அந்நிய செலவாணியை பரிமாற்றம் செய்வது.

டிரேடிங்(வர்த்தகம்) என்றால் என்ன?
பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகும்.

போரெக்ஸ் டிரேடிங் என்றால் என்ன ?
அந்நிய செலவாணியை வாங்குதல் மற்றும் விற்றல் ஆகும். எடுத்துகாட்டாக, நாம் ஒரு அமெரிக்க டாலர் வாங்க 68 இந்திய ரூபாய் கொடுக்க(விற்க) வேண்டும்.

சந்தை என்றால் என்ன ?

பொருளை வாங்குவதற்கும் விற்பதற்கும் உள்ள இடம் தான் சந்தை.

போரெக்ஸ் மார்க்கெட்(சந்தை) என்றால் என்ன ?

பல வெளிநாட்டு நாணயங்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் ஏற்ற இடம் தான் போரெக்ஸ் மார்க்கெட்(சந்தை).

போரெக்ஸ் வர்த்தகம்:

கரன்சி வர்த்தகம் என்பது ஒரே சமயத்தில் ஓர் currency-ஐ வாங்குவதும் இன்னொரு currency -ஐ விற்பதும் ஆகும். ஓர் currency ஜோடி என்பதை “கிராஸ்” என்று அழைப்பார்கள். (எ.கா. EUR/USD , GBP/USD) அதிகமாக வர்த்தகம் செய்யப்படும் currency ஐ மேஜர் currency என்று அழைப்பார்கள். EURUSD, USDJPY, USDCHF and GBPUSD இவை எல்லாம் மேஜர் currency கள் ஆகும்.

ஏன் போரெக்ஸ் ?
24 மணி நேர டிரேடிங் இதில் உள்ள ஒரு மிக பெரிய வசதி ஆகும். 24 மணி நேரமும் மார்க்கெட்டில் டிரேடிங் செய்ய முடியும். வாரத்தில் 5 நாட்கள் (திங்கள் முதல் வெள்ளி வரை) மார்க்கெட் திறந்து இருக்கும். கமிசன் இல்லை! Forex இல் trading செய்ய கமிசன் இல்லை.

ஆர்டர் இன் வகைகள் (ORDER TYPES) :
ஆர்டர் என்பது நீங்கள் எப்படி trade ஐ ஆரம்பிக்கிறீர்கள் அல்லது எப்படி முடிக்கிறீர்கள் என்பது ஆகும். உங்களுடைய போரெக்ஸ் புரோக்கர் எந்த விதமான ஆர்டர்-ஐ அனுமதிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஒவ்வொரு புரோக்கரும் ஒவ்வொரு விதமான ஆர்டர்ஐ  அனுமதிப்பார்கள்.

அடிப்படை ஆர்டர் வகைகள்:

மார்க்கெட் ஆர்டர்(Market order) :

மார்க்கெட் ஆர்டர் என்பது அப்போது உள்ள மார்க்கெட் விலையில் ஆர்டர்-ஐ  வாங்குவதோ அல்லது விற்பதோ ஆகும். உதரணமாக:- EUR/USD ஐ 1.4140 என்ற விலையில் trade செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். இப்பொது நீங்கள் இந்த விலையில் வாங்க நினைத்தால் ; Buy என்பதை கிளிக் செய்ய வேண்டும் உங்களுடைய trading platform உடனே buy ஆர்டர் ஐ அந்த சரியான விலையில் ஏற்படுத்தி விடும்.

லிமிட் ஆர்டர் :
லிமிட் ஆர்டர் என்பது குறிபிட்ட விலையில் வாங்கவோ அல்லது விற்கவோ நிர்ணயிக்கப்பட்ட ஆர்டர் ஆகும். இந்த ஆர்டர் இல் முக்கியமானது விலை மற்றும் காலம் ஆகும். உதரணமாக:- EUR/USD 1.4050 இல் இருபதாக வைத்து கொள்ளவோம். நீங்கள் EUR/USD 1.4070 வந்த பிறகு ஓர் buy ஆர்டர் கொடுக்க நினைத்தாள். நீங்கள் உங்கள் கம்ப்யூட்டர் முன்பு காத்து கிடக்க வேண்டியதில்லை. நீங்கள் Buy லிமிட் ஆர்டர் செட் செய்து விட்டால் போதும்.

இப்பொழுது விலை 1.4070 வரை உயர்ந்தால் போதும் உங்களுடைய trading platform தானாகவே அந்த buy ஆர்டர் ஐ ஏற்படுத்தி விடும். நீங்கள் எந்த currency ,எந்த விலையில், வாங்க வேண்டுமா அல்லது விற்க வேண்டுமா என்பதை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. Buy ஆர்டர்-ஐ  செட் செய்ய Buy லிமிட். Sell ஆர்டர்-ஐ  செட் செய்ய Sell லிமிட். லிமிட் ஆர்டர் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பதையும் செட் செய்து விடலாம்.

ஸ்டாப் லாஸ் ஆர்டர்(Stop-loss order):
நீங்கள் EUR/USD ஐ 1.5030 இல் முன்பு வாங்கியதாக கொள்வோம். நீங்கள் இழக்க தகுந்த அதிக பட்ச விலை(Stop-loss) 1.5000 என செட் செய்து விட்டால்…மார்க்கெட்டும்  1.5030 இக்கு மேலே ஏறாமல் 1.5000 இக்கு கிழே இறங்கினால் உங்களுடைய trading platform தானாகவே 1.5000 இல் ஓர் sell ஆர்டர்I ஏற்படுத்தி அந்த trade-ஐ  மூடி விடும். உங்களுடைய இழப்பு $30 டாலர் உடன் நிறுத்தி விடும்.ஸ்டாப் லாஸ் ஆர்டர்(Stop-loss order) மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். ஏனெனில் உங்களுடைய பணம் முழுவதும் இழந்து விடுவோமோ என்று பயப்பட தேவை இல்லை.

Margin Call என்றால் என்ன?
நீங்கள் ஓர் ரெகுலர் போரெக்ஸ் அக்கௌன்ட் ஐ $2,000 உடன் ஓப்பன் செய்வதாக வைத்து கொள்வோம். ஓர் ஸ்டாண்டர்ட் லாட் இல் (100,000 units) EUR/USD ஐ ஓப்பன் செய்வதாக வைத்து கொள்வோம், இதற்கு குறைந்த பட்ச எல்லை தொகை(margin) $1000 தேவை. உபயோக படுத்தக்கூடிய எல்லை தொகை(usable margin) என்பது புதிதாக trade open செய்ய பயன்படுவது ஆகும்.

நீங்கள் $2,000 உடன் ஆரம்பித்திர்கள் ஆதனால் உங்களுடைய உபயோக படுத்தகூடிய எல்லை தொகை(usable margin) $2,000 ஆகும். ஆனால் நீங்கள் 1 லாட்டில் trade ஓப்பன் செய்துள்ளதால் அதற்கு தேவையான எல்லை தொகை$1,000 பயன்படுத்த பட்டுவிட்டது(used margin) . எனவே மீதம் $1000 மட்டுமே உள்ளது(usable margin) . அதனால் இப்பொழுது உங்களது எல்லை தொகை(usable margin) $1,000 மட்டுமே.

நம்முடைய லாப நஷ்ட கணக்கை எப்படி கணக்கிடுவது?
இப்போது உங்களுக்கு பிப் மதிப்பை எப்படி தெரிந்து கொள்வது என்று உங்களுக்கு தெரியும். இப்போது உங்களுடைய லாப நஷ்ட கணக்கை எப்படி கணக்கிடுவது என்பதை பார்ப்போம். நாம் இப்பொழுது USD ஐ வாங்கி CHF ஐ விற்பதாக வைத்து கொள்வோம். அப்போதைய விலை 1.4525 / 1.4530 என வைத்து கொள்வோம். நாம் ஓர் ஸ்டாண்டர்ட் லாட்(100,000 units) 1.4530 இல் வாங்குகிறோம்.

சிறிது நேரத்திற்கு பிறகு அதன் மதிப்பு 1.4550 ஆக உயர்வதாக வைத்து கொள்வோம். நீங்கள் இப்பொழுது இந்த trade ஐ முடிக்க நினைத்தால் இப்பொழுது விற்க வேண்டும் ஏனெனில்  நீங்கள் முதலில் வாங்கி உள்ளீர்கள். நாம் வாங்கியதற்கும் விற்றதற்கும் உள்ள வித்தியாசம் 1.4530 கழித்தால் 1.4550 கிடைப்பது .0020 அல்லது 20 pips ஆகும்.நம்முடைய கணக்கின் படி
(.0001/1.4550) x 100,000 = $6.87 per pip x 20 pips = $137.

லிவேரயிஜ்(Leverage) என்றால் என்ன ?
எப்படி நம்மை போல் சிறிய முதலிட்டாளர்கள் பெரிய தொகையை trade செய்கிறார்கள் என்று தெரியுமா? உங்களுடைய புரோக்கர்ஐ- ஓர் வங்கியாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.$100,000 currecy ஐ வாங்க $1,000 கொடுத்தால் போதும்.உண்மையாகவா? போரெக்ஸ் trading இல் லிவேரயிஜ்(Leverage) எப்படி செயல்படுகிறது என்று பார்போம்.
எவ்வளவு லிவேரயிஜ்(Leverage) பயன்படுத்துகிறீர்கள் என்பது உங்கள் புரோக்கர் ஐயும் உங்கள் விருப்பத்தையும் பொருத்தது.

புரோக்கர்க்கு முதலில் trade deposit தேவை. trade deposit அக்கௌன்ட் margin என்றும் அழைக்கப்படுகிறது.நீங்கள் பணத்தை deposit செய்ததும் trade செய்ய ஆரம்பித்து விடலாம்.புரோக்கர் உங்களிடம் ஓர் trade செய்ய எவ்வளவு தேவை என்பதை குறிப்பிடுவார்கள் .

உதரணமாக உங்களுடைய லிவேரயிஜ்(Leverage) 100:1 ஆக இருந்து நீங்கள் $100,000 இக்கான மதிப்பில் trade செய்ய விரும்பினால் உங்களுடைய புரோக்கர் $1,000 ஆக குறிப்பிடுவார். அதுபோல நீங்கள் $5,000 வைத்து இருந்தால் உங்களை $500,000 வரை trade செய்ய அனுமதிப்பார்கள். குறைந்தபட்ச பாதுகாப்பு தொகை(margin) புரோக்கர் ஐ பொருத்து மாறுபடும்.

Pip என்றால் என்ன ?
“pips” மற்றும் “lots” பற்றி தெரியாமல் போரெக்ஸ் TRADING ஆரம்பிக்காதிர்கள்.
பொதுவாக Pip என்பதை currency இன் உயர்வை குறிப்பிடுவார்கள். உதரணமாக EUR/USD 1.4150 இல் இருந்து 1.4151 இக்கு உயர்ந்தால் அது ஒரு PIP ஆகும்.Pip என்பது குறிapட்டின் கடைசி இலக்க தசம எண் ஆகும். Pip உங்களின் லாப நஷ்டத்தை குறிப்பிட உதவுகிறது.

இதற்கு நாம் ஒரு உதாரணத்தை பார்போம், USD/JPY இன் மதிப்பு 119.80 இல் (பெரும்பாலான currency களில் 4 இலக தசம எண் கொண்டிருக்கும் ஆனால் USD/JPY 2 இலக தசம எண் கொண்டிருக்கும் )
அப்படியானால் USD/JPY இல் ஓர் PIP என்பது .01 ஆகும்.
அப்படியானால்,USD/JPY:119.80    01 ஐ பரிமாற்ற விலையோடு வகுத்தால் Pip விலை கிடைக்கும்.
.01 / 119.80 = 1.198

Lot என்றால் என்ன?
ஸ்டாண்டர்ட் லாட் சைஸ் என்பது 100,000 யூனிட்கள் ஆகும். மினி லாட் சைஸ் என்பது 10,000 யூனிட்கள் ஆகும். மைக்ரோ லாட் சைஸ் என்பது 1,000 யூனிட்கள் ஆகும். உங்களுக்கு ஏற்கனவே currency கள் pip களால் குறிப்பிடப்படுகின்றன என்பது தெரியும். Pip என்பதை currency இன் உயர்வை குறிப்பிடுவார்கள். அந்த சிறிய உயர்வை பயன்படுத்தி நாம் நிறைய சம்பாதிக்க முடியும்.

உதரணமாக நாம் ஸ்டாண்டர்ட் சைஸ் லாட் 100,000 யூனிட்கள் பயன்படுத்துவதாக வைத்துகொள்வோம். நாம் இப்பொழுது மீண்டும் ஓர் கணக்கு போடுவோம் இது Pip ஓட மதிப்பை எப்படி பாதிக்கிறது என்று பார்ப்போம்.
USD/JPY இன் பரிமாற்ற விலை (exchange rate) 119.80 எனில்
(.01 / 119.80) x 100,000 = $8.34 per pip

ஓர் பிப் ஓட மதிப்பு 8.34 டாலர் ஆகும்.currency இன் முதலில் USD குறிப்பிட வில்லை எனில் சற்று வித்தியாச படும்.
EUR/USD இன் பரிமாற்ற விலை (exchange rate) 1.1930 எனில்
(.0001 / 1.1930) X 100,000 = 8.38 x 1.1930 = $9.99734 முழுமையாக $10 per pip

பெரும்பாலான புரோக்கர்களிடம் நீங்கள் இலவசமாகவே டெமோ அக்கௌன்ட் ஓபன் செய்ய முடியும்.டெமோ அக்கௌன்ட் என்பது ஓர் மாதிரி அக்கௌன்ட் ஆகும், இது ரியல் (Real) அக்கௌன்ட் இல் உள்ள அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. இது நீங்கள் கற்று கொள்வதற்கு மிகவும் உதவியாய் இருக்கும். இதில் நீங்கள் பணம் டெபாசிட் செய்யாமல் Trade செய்ய கற்று கொள்ளலாம். அதனால் இதில் ரிஸ்க் இல்லை. அதனால் டெமோ அக்கௌன்ட் நீங்கள் கற்று கொள்வதற்கும்  உங்களது திறமை-ஐ அறிந்து கொள்வதற்கும் மிகவும் உதவியாய் இருக்கும்.

குறைந்தது நீங்கள் 3 மாதம்  டெமோ அக்கௌன்ட் இல் கற்று கொள்ள வேண்டும்.
எல்லா போரெக்ஸ் குறீடுகளும் இரு வழி  விலைகளை கொண்டுள்ளன அவை Bid மற்றும் Ask ஆகும். Bid மற்றும் Ask இக்கு உள்ள வித்தியாசம் Spread என்று அழைக்க படுகிறது. இதற்கு நாம் ஒரு உதாரணத்தை பார்போம்,

இந்த GBP/USD இல், 1.7445 என்பது Bid விலை, 1.7449 என்பது Ask விலை ஆகும். இங்கு இந்த ப்ரோகர் இடம் வாங்குவதும் விற்பதும் மிக சுலபம். வாங்குவதற்கு Buy என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.விற்பதற்கு sell என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும். இனி குறிப்பிட்ட currency ஐ எப்போது வாங்க வேண்டும் எப்போது விற்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம் பார்போம்.

EUR/USD
இந்த உதாரணத்தில் EUR தான் base currency அதனால் EUR வை தான் அடிப்படையாக கொண்டு வாங்கவோ விற்கவோ வேண்டும். நீங்கள் US பொருளாதாரம் விழ்ச்சி அடைவதாக நம்பினால் அது USD இக்கு நல்லது அல்ல. அதனால் நீங்கள் EUR/USD ஐ Buy செயலாம். இப்படி செய்வதனால் நீங்கள் யூரோ(EUR) வை வாங்குகிறீர்கள் இது USD விழ்ச்சி அடைவதால் மேலே உயரும். நீங்கள் US பொருளாதாரம் எழுச்சி அடைவதாக நம்பினால் அது USD இக்கு நல்லது. அதனால் நீங்கள் EUR/USD ஐ Sell செயலாம். இப்படி செய்வதனால் நீங்கள் யூரோ(EUR) வை விற்குக்ரிர்கள் இது USD எழுச்சி அடைவதால் கீழே செல்லும்.

சில ஃபோரெக்ஸ் அடிப்படைகள்:

ஒரு கரன்சி ஜோடியில் பட்டியலிடப்பட்டுள்ள முதல் கரன்சி “அடிப்படை கரன்சி” என்றழைக்கப்படுகிறது. “அடிப்படை கரன்சி” என்பது வழக்கமாக யூ.எஸ். டாலராகத்தான் இருக்கும். வர்த்தகர்கள் பொதுவாக இன்னொரு கரன்சிக்கு எதிராக யூ.எஸ்.டாலரை வர்த்தகம் செய்வார்கள், இது “எதிர் கரன்சி” என்றழைக்கப்படும். கரன்சிகள் ஜோடிகளில்தான் விலைபேசப்படும். உதாரணமாக:

யூ.எஸ். டாலர் மற்றும் ஜப்பானிய யென் ஜோடி பின்வரும் முறையில் விலை பேசப்படும்: USD/JPY 2.5க்கு சமமானது (அதாவது 1 யூ.எஸ்.டாலரால் 2.5 JPY-யை வாங்க முடியும்).
விலை நிர்ணயம் அதிகரிக்குமானால், “அடிப்படை கரன்சி”யின் மதிப்பு உயர்ந்துள்ளது மற்றும் “எதிர் கரன்சி”யின் மதிப்புக் குறைந்துள்ளது என்று பொருள். உதாரணமாக: USD/JPY விலை நிர்ணயம் 2.5க்கு சமமாக இருந்த, இப்போது 2.6க்கு சமமாக இருந்தால், டாலர் பலம் பெற்றுவிட்டது என்று பொருள் (ஏனென்றால், முன்பு 2.5 JPY-யை வாங்க முடிந்த நிலையுடன் ஒப்பிடும்போது, இப்போது 1 யூ.எஸ்.டாலரால் 2.6 JPY-யை வாங்க முடியும்).

ஆஸ்க் பிரைஸ் (கேட்பு விலை)
கேட்பு விலை (வலது புறம் காட்டப்படும் விலை) என்பது அடிப்படை கரன்சியை வர்த்தகர்கள் வாங்கும் விலையாகும். யூரோவின் மதிப்பு உயருமென்று நீங்கள் எதிர்பார்த்தால், அதனை நீங்கள் கேட்பு விலையில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு யூஎஸ்டிக்கு பதிலாக நீங்கள் வாங்க முடிவு செய்யலாம்.

பிட் பிரைஸ் (கோரும் விலை)
கோரும் விலை (இடது புறம் காட்டப்படும் விலை) என்பது, வர்த்தகர்கள் அடிப்படை கரன்சியை விற்கக்கூடிய விலையாகும். யூரோவின் மதிப்பு குறையுமென்று நீங்கள் நினைத்தால், அதனை நீங்கள் கோரும் விலையில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு யூஎஸ்டிக்கு பதிலாக நீங்கள் விற்க முடிவு செய்யலாம்.

கவுன்டர் கரன்சி (எதிர் கரன்சி)
எதிர் கரன்சி என்பது, கரன்சி ஜோடியில் உள்ள இரண்டாவது கரன்சியாகும். அதன் மதிப்பு, அடிப்படை கரன்சியின் மதிப்பிற்கு எதிராக நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக, EUR/USD என்ற கரன்சி ஜோடியில், எதிர் கரன்சியாக இருப்பது USD ஆகும்.

கிராஸ் ரேட் (குறுக்கு விகிதம்)
USD அல்லாத ஒரு கரன்சிக்கு எதிராக கோட் செய்யப்பட்ட எந்தவொரு கரன்சியையும் கொண்ட விலை கோட். இந்த கோட் USDக்கு எதிரான இரண்டு கரன்சிகளின் தனித்தனி செலாவணி விகிதங்களைக் கொண்டிருக்கும்.

ரிஸ்க் கேபிடல் (இடர் முதலீடு)
ஏற்படக்கூடிய இழப்பினால் தங்கள் வாழ்க்கை முறை மாறாத அளவிற்கு அபாயத்தை சந்திப்பதற்கு வர்த்தகர்கள் தயாராக இருக்கக்கூடிய குறிப்பிட்ட தொகை.

ஸ்டாப் லாஸ் (இழப்பு நிறுத்தம்)
உங்கள் நிலைக்கு எதிராக சந்தை செல்லுமானால், இழப்புகளை தவிர்க்கும் பொருட்டு, ஒரு குறிப்பிட்ட விலையில், திறந்துள்ள நிலையை தானாகவே மூடிக்கொள்ளச் செய்கின்ற ஒரு வர்த்தக ஆர்டர்.

டேக் புராஃபிட் (லாபம் எடுத்தல்)
ஒரு குறிப்பிட்ட விலையில், ஒரு குறிப்பிட்ட தொகை லாபத்தை ஈட்டியபின் திறந்துள்ள நிலையை தானாகவே மூடிக்கொள்ளச் செய்கின்ற ஒரு வர்த்தக ஆர்டர். உங்கள் லாபத்தை ஈட்டுவதற்கு இந்த ஆர்டரைப் பயன்படுத்தலாம்.

டெக்னிகல் அனாலிஸஸ் ( தொழில்நுட்பப் பகுப்பாய்வு)
இவ்வகை பகுப்பாய்வு, கரன்சியின் வரைபட வடிவங்கள் மீது கவனம் செலுத்துகிறது. கரன்சியின் கடந்த கால நடத்தையைப் பார்ப்பதன் மூலம் அதன் எதிர்கால இயக்கங்களை கவனிக்க முடியும் என்று இது கருதுகிறது.

நீங்கள் எங்களுடைய ஆன்லைன் போரெக்ஸ் பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால், support@forexgdp.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

நன்றி !